விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
சந்தானம் போன்ற ஒரு காமெடியனை கூட்டு சேர்த்துக்கொண்டு கதாநாயகிகளை துரத்தி துரத்தி காதலிக்கிற கதையெல்லாம் இனிமேல் ஒர்க்அவுட்டாகாது என்பதை புரிந்து கொண்டுவிட்டார் ஆர்யா. மேலும், ராஜாராணி படத்திற்கு பிறகு ஆர்யா நடித்த 7 படங்கள் வரிசையாக ஓடவில்லை. அதில் ராஜேஷ்.எம் இயக்கிய வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தை ரொம்பவே எதிர் பார்த்தார் ஆர்யா. ஆனால் அந்த படமும் சொதப்பி விட்டது. அதனால் இப்படியே விட்டால் மார்க்கெட் காலியாகி விடும் என்பதால், இப்போது சூப்பர்குட் பிலிம்சுடன் இணைந்து மஞ்சப்பை ராகவன் இயக்கும் படத்தை தயாரித்து நடிக்க தயாராகி விட்டார் ஆர்யா.
மேலும், சட்டையில் மண் ஒட்டாமல் நடிக்கிற வேலையெல்லாம் எடுபடாத என்பதால் நான் கடவுள் பாணியில் அந்த படத்தில் காட்டுவாசியாக நடிக்கவும் தன்னை தயார்படுத்தி விட்ட ஆர்யா, ஜீவா நடித்துள்ள போக்கிரிராஜா பாணியில் தானும் ரஜினியின் தனிக்காட்டுராஜா பட டைட்டிலை தனது படத்துக்கு வைக்க முயறசிப்பதாக சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது அந்த செய்தியை ஆர்யா தரப்பு மறுத்துள்ளது. ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. கதைக்கு பொருத்தமான டைட்டில் பரிசீலணை நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.