ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்த கெத்து படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் அளித்தும் வரிவிலக்கு கிடைக்கவில்லை. கெத்து தமிழ் வார்த்தை இல்லை என்று அதற்கு காரணம் கூறப்பட்டது. இதனை எதிர்த்து உதயநிதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் கெத்து தமிழ் வார்த்தைதான், படம் வெளியான நாளிலிருந்து வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் விரிவிலக்கு அளிக்க சொன்ன கோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்ததுடன், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு உதயநிநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கை வருகிற 21ந் தேதிக்கு தள்ளி வைத்தது.