இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'புலி' படம் என்றதுமே விஜய் ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லையோ, அந்தப் படத்தின் இசை வெளியீட்டில் 'புலி...புலி...புலி' என அடுக்கு மொழிகளால் பேசிய டிஆர் தான் முதலில் ஞாபகத்திற்கு வருவார். 'புலி' படம் மட்டும் நன்றாக இருந்திருந்தால் அந்தப் படத்திற்கு இலவசமாக விளம்பரங்களை தனது பேச்சால் தந்தவர் என டிஆரை பலரும் மெச்சியிருப்பார்கள். ஆனால், அப்படி ஒரு விஷயம் நடக்காமல் போய்விட்டது.
இருந்தாலும் டிஆர் என்ற பிராண்டை விஜய்யும் விடுவதாக இல்லை போலிருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் 50வது படமாக உருவாகி வரும் 'தெறி' படத்தில் டிஆர் ஒரு குத்துப் பாடலை 'தெ.......றிறிறிறிறி'க்க விட்டிருக்கிறார் என ஜி.வி. நேற்று தெரிவித்துள்ளார்.
ஒரு 'புலி'யைப் பல புலியாக்கி டிஆர் பேசியதற்கே பல மீமீக்கள் சமூக வலைத்தளங்களில் சூறாவளியாக சுழன்றன. 'தெறி' படத்தில் அவர் பாடியுள்ள குத்துப் பாடலில் எத்தனை 'தெறி'க்களை தெறிக்க விட்டிருப்பாரோ என மீமீக்களை உருவாக்குபவர்கள் இப்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியோ ரசிகர்களுக்கு சரியான ஒரு 'என்டர்டெயின்மென்ட்' கிடைக்கப் போவது நிச்சயம்.