‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இன்றைய இளைஞர்களிடம் 'டப்ஸ்மாஷ்' என்பது மிகப் பெரிய ஃபேஷனாகிவிட்டது. சிறியவர்கள், பெரியவர்கள் வரை தங்களது 'நடிப்புத்' திறமையை இந்த 'டப்ஸ்மாஷை' வைத்து சோதித்துக் கொள்கிறார்கள். டிவிக்களோ இன்னும் ஒரு படி மேலே போய் அப்படிப்பவர்களின் ஆர்வத்தை வைத்து நிகழ்ச்சிகளையே ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். காலத்திற்கேற்ப, வளர்ச்சிக்கேற்ப அனைவரும் மாறி வருகிறார்கள். 'டப்ஸ்மாஷ்' வந்த காலத்திலேயே பலரும் அதை டிரை செய்தார்கள். நட்சத்திரங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படி வந்தவைகளில் பலவும் சுவாரசியமாக ரசிக்க வைக்கும் அளவிற்கு இருந்தன.
நேற்று மாலை சூர்யா உங்களுக்கு ஒரு 'சர்ப்ரைஸ்' வைத்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் அவரைச் சார்ந்தவர்கள் தகவல்களைப் பரப்பினார்கள். ஒரு வேளை இன்று வெளியாக உள்ள அவர் நடித்த '24' படத்தின் டீசர் பற்றியதாக இருக்குமோ என பலரும் ஆச்சரியத்துடன் காத்திருந்தனர்.
'My first Dubsmash' என சூர்யாவும் ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார். அது '24' படத்தைப் பற்றியதாக இருக்குமோ என 'பிளே' செய்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 'முத்து' படத்தில் ரஜினிகாந்த் பேசும் 'இந்த தும்மலு, இருமலு, விக்கலு, கொட்டாவி...' என்ற ஜாலியான வசனத்துடன் ஆரம்பமானது வீடியோ. சில வினாடிகளில் முடிந்த அந்த வசனத்தின் கடைசியில்தான் திருப்பு முனை. “இந்த மாதிரி எவ்வளவு டயலாக்ஸ் சொன்னாலும் 'வாய்ஸ்' கொடுத்துக்கிட்டேயிருக்கலாம். ஆனால், இந்த எலெக்ஷன்ல, உங்களோட 'வாய்ஸ்'ஐ யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீங்க. ப்ளீஸ் கம் வோட், அன்ட் வோட்' என வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான விழிப்புணர்வு 'டப்ஸ்மாஷ்' ஆக அந்த வீடியோ இருந்தது.
இனி, இன்னும் இப்படி விதவிதமான வீடியோக்களை ரசிகர்கள் பார்க்கலாம். பார்ப்பதுடன் நின்று விடாதீர்கள் ரசிகர்களே, உங்களது ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றுங்கள்.