ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'தங்கமகன்' படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்த படத்தை தனது வழக்கமான அதிரடி ஸ்டைலில் கொடுக்க வேண்டும் என்று தனுஷ் முடிவெடுத்தார். இரண்டு வெற்றிகளைக் கொடுத்த துரை.செந்தில்குமார் இயக்கத்தில் 'கொடி' படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து சுமார் இரண்டு மாதங்களுக்குள் அந்தப் படத்தை முடித்துவிட்டார்கள். பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அரசியல் கதையாக இருக்கும் என படத்தின் 'லீக்' ஆன புகைப்படங்களைப் பார்த்து அனைவரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
தனுஷ் ஜோடியாக முதல் முறையாக த்ரிஷா, 'பிரேமம்' பட நாயகிகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன், தனுஷ் நடிக்கும் ஒரு படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' படத்தில் நடிப்பார் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், அந்தப் படத்திற்கு முன்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்கப் போகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நாயகி யார், மற்ற கலைஞர்கள் யார் என்பதை கூடிய சீக்கிரம் அறிவிக்க உள்ளார்கள் எனத் தெரிகிறது.
கௌதம் மேனன், தனுஷ் முதல் முறையாக இணைவதால் இந்தப் படத்திற்கு இப்போதே ஒரு எதிர்பார்ப்பு வந்துவிட்டது.