ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் பிரம்மோத்சவம் எனும் குடும்ப பொழுபோக்கு திரைப்படத்தில் நடித்து வரும் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, அப்படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தெலுங்கு சின்னத்திரையின் பிரபல நடிகை ராஷ்மி கௌதம் ஒப்பந்தமாகியுள்ளாராம். சாந்தனு பாக்யராஜ், சந்தானம் நடித்த கண்டேன் எனும் தமிழ் படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ராஷ்மி விரைவில் வெளிவரவிருக்கும் குண்டூர் டாகீஸ் எனும் தெலுங்கு படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்நிலையில் மகேஷ் பாபு - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக ரஷ்மி தெரிவித்துள்ளார்.