ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
புலி, வேதாளம் படங்களை அடுத்து இந்தியில் ராக்கி ஹேண்டசம், ஆரா ஆகிய படங்களில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தெலுங்கில் பிரேமம், தமிழில் எஸ்-3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தபடியாக தனது தந்தை கமல்ஹாசன் நடிப்பில் தொடங்கவிருக்கும் அம்மா அப்பா விளையாட்டு படத்திலும் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இதற்கு முன்பு உத்தமவில்லன் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க கேட்டபோது தெலுங்கு படத்தில் பிசியாக நடித்து வருவதாக சொல்லி மறுத்தார் ஸ்ருதி. அதனால் இந்த முறை அவரிடம் முன்பே கால்சீட் வாங்கி விட்டனர். அதனால் ஏப்ரல் மாதம் அப்பா கமலுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள்.
மேலும், இதற்கு முன்பே அப்பா கமலுடன் நடிக்க அப்படங்களின் டைரக்டர்கள் அவரை அணுகியபோது, என் அப்பா பெரிய நடிகர். ஆனால் நானோ இப்போதுதான் வளர்ந்து வருகிறேன். அவருடன் நடிக்கும் அளவுக்கு இன்னும் நான் தகுதி பெறவில்லை என்று சொல்லி தவிர்த்து வந்தாராம் ஸ்ருதி. ஆனால் இப்போது கிட்டத்தட்ட 25 படங்கள் வரை நடித்து விட்டதோடு, சிறந்த நடிகை என்கிற பெயரை இந்திய அளவில் எடுத்து விட்டதால், அப்பாவுடன் நடிப்பதற்கான தகுதி பெற்று விட்டேன் என்று சொல்லித்தான், 'அம்மா அப்பா விளையாட்டு' படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்த படத்தில் அவர் கமலின் மகளாகவே நடிக்கிறாரா? இல்லை வேறு வேடத்தில் நடிக்கிறாரா? என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.