ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. அந்தப் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு அச்சாரம் என்ற படத்தில் நடித்தவர், பாயும் புலி படத்திலும் சிறு வேடத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான அருள்நிதியின் 'ஆறாது சினம்' படத்திலும் நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா, மறைந்திருந்துபார்க்கும் மர்மம் என்ன, சட்டம் என இரண்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனுஷ் நடிக்கும் ரயில் படத்தை தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். 'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கிய எஸ். ஆர்.பிரபாகரன் இப்படத்தை இயக்குகிறார். அண்மையில் இப்படத்தின் பூஜை நடந்தது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை மஞ்சிமா மோகன் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தநிலையில் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா தத்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தில் சிறப்பாக நடித்தும் இன்னும் முன்னணி கதாநாயகி வரிசையில் இடம் பிடிக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவுக்கு இந்தப் படமாவது கை கொடுக்கிறதா என் பார்ப்போம்.