Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன்முறையாக ஆஸ்கர் விருது பெற்ற டிகேப்ரியோ : 6 விருதுகளை அள்ளிய மேட் மேக்ஸ் பியூரி ரோடு

29 பிப், 2016 - 09:29 IST
எழுத்தின் அளவு:
88th-OSCAR-Awards-Full-List---Mad-Max-Fury-Road-bags-6-awards

சினிமா உலகின் மிக உயரிய விருதுகாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்தாண்டுக்கான 88வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகமும் இந்த விழாவில் குவிந்தனர். முன்னதாக ஹாலிவுட் பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


விழாவில், மேட் மேக்ஸ், தி ரெவனென்ட், மேட் மேக்ஸ் பியூரி ரோடு, தி மார்ஷியன் படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் மேட் மேக்ஸ் பியூரி ரோடு படம் அதிகபட்சமாக 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றதது. ஏற்கனவே 4 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டைட்டானிக் புகழ் லியார்னோ டி கேபிரியோ முதன்முறையாக தி ரெவனென்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார்.


ஆஸ்கர் விருது விபரம் வருமாறு....


சிறந்த நடிகர் : லியார்னோ டி கேபிரியோ - தி ரெவனென்ட்


சிறந்த நடிகை : பிரீ லார்சன் ரூம்


சிறந்த படம் : ஸ்பாட் லைட்


சிறந்த இயக்குநர் : அலெக்ஸாண்ட்ரோ ஜி இனாரிட்டு - தி ரெவனென்ட்


சிறந்த துணை நடிகை : அலிசியா விகாண்டர் (தி தனிஷ் கேர்ள்)


சிறந்த துணை நடிகர் : மார்க் ரைலன்ஸ் (ப்ரிட்ஜ் ஆப் ஸ்பைஸ்)


சிறந்த இசை : என்னியோ மோரிகோன், படம்: தி ஹேட்புல் எயிட்


சிறந்த பாடல் : ரைட்டிங்ஸ் ஆப் தி வால்... ஸ்பெக்டர்


சிறந்த ஒளிப்பதிவு : இம்மானுவேல் லுபெஸ்கி (தி ரெவனென்ட்)


சிறந்த படத்தொகுப்பு : மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)


சிறந்த திரைக்கதை : டாம் மெக்கார்தி, ஜாஸ் சிங்கர் (ஸ்பாட் லைட்)


சிறந்த தழுவல் திரைக்கதை : சார்லஸ் ராண்டோல்ப், ஆடம் மெக்காய் (தி பிக் ஸ்பார்ட்)


சிறந்த கலை இயக்கம் : கோலின் கிப்சன், லிசா தாம்ஸன்(மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)


சிறந்த கலை இயக்குனர் : கோலின் கிப்சன் மற்றும் லிசா தாம்ஸன் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)


சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்கார விருது : லெஸ்லீ வேண்டர்வால்ட், எல்கா வார்டேகா மற்றும் டேமியன் மார்ட்டின்(மேட் மேக்ஸ் - ப்யூரி ரோட்)


சிறந்த ஆடை வடிவமைப்பு : ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)


சிறந்த ஒலி தொகுப்பு : மார்க் ஏ.மன்கினி, டேவிட் வொயிட் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)


சிறந்த ஒலிக்கலவை : கிரிஸ் னென்கின்ஸ், கிரேக் ருட்லூஃப், பென் ஒஸ்மோ


சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : மார்க் வில்லியம்ஸ் ஆர்டிங்டன், சரா பென்னெட், பால் நோரீஸ், ஆண்ட்ரூ வொய்ட்ஹர்ஸ் (எக்ஸ் மெசினா)


சிறந்த அனிமேஷன் குறும்படம் : பாடோ எஸ்காலா, கேப்ரியல் ஒசோரியோ வார்காஸ் (பியர் ஸ்டோரி)


சிறந்த அனிமேஷன் படம் : பீடே டாக்டர், ஜோனாஸ் ரிவேரா(இன்சைட் அவுட்)


சிறந்த ஆவண குறும்படம் : எ கேர்ள் இன் தி ரிவர்


சிறந்த ஆவணப்படம் : எமி (விருது பெற்றவர்கள் : ஆசிப் கப்பாடியா மற்றும் ஜேம்ஸ் ரே)


சிறந்த வெளிநாட்டு படம் : சன் ஆப் சவுல் - ஹங்கேரி நாட்டு படம்


இந்தியருக்கு விருது: பிரிட்டனில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிப் கபாடியாவுக்கு, சிறந்த ஆவணப்படத்திற்கான விருது கிடைத்தது. அதேசமயம், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சஞ்சய் படேலின் அனிமேஷன் படமான, பியர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், விருது கிடைக்கவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த ஷார்மீன் அபைட், தன் ஆவணப்படமான, ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி பிரின்ஸ் ஆப் பர்கிவ்னஸ்க்காக விருது பெற்றுள்ளார்.



பிரியங்கா சோப்ரா : பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்தியாவைச் சார்ந்த ஒருவர், ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கியது இதுவே முதல்முறை.



அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், பிரபல பாப் இசை பாடகி லேடி காகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in