தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ப்ரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகின்றனர். ப்ரியங்கா, ஹாலிவுட் சீரியலான குவாண்டிகோ மூலம் பிரபலமானவர், இப்போது நடிகர் ராக் உடன் 'பேவாட்ச்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். செத் கார்டன் இயக்கும் இப்படம் 1990களில் டிவியில் ஒளிப்பரப்பான 'பேவாட்ச்' சீரியலை மையமாக வைத்து உருவாக உள்ளது. சமீபத்தில் ராக் மற்றும் ப்ரியங்கா தொடர்பான போட்டோ ஷூட் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்கள். படம் அடுத்தாண்டு மே 19ம் தேதி வெளியாக உள்ளது. பேவாட்ச் படம் மியாமி உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.
நேற்று தான் தீபிகா நடித்து வரும் ஹாலிவுட் படமான டிரிபிள் எக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.