ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்கும் வாஹா படத்தில் நடித்துள்ள விக்ரம்பிரபு, அதையடுத்து கணேஷ் விநாயக் இயக்கும் வீரசிவாஜி படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஜீத்தின் மச்சினிச்சி ஷாமிலி நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு.
கிராமத்து கதையில் உருவாகும் இந்த படத்தில் விக்ரம்பிரபுவுக்கு இரண்டு ஜோடிகளாம். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா ஏற்கனவே கமிட்டாகி விட்ட நிலையில், இன்னொரு நாயகி தேடும் படலம் சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், இப்போது கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுடன் நடித்துள்ள மஞ்சிமா மோகனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்திலும் தனக்கே முதன்மை நாயகி வேடம் என்பதால், தாய்மொழியான மலையாள சினிமாவை குறைத்துக்கொண்டு தமிழுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக கூறும் மஞ்சிமாமோகன், மலையாளத்தில் ஹோம்லியாக மட்டுமே நடித்திருந்தபோதும் தமிழில் ஓரளவு கிளாமராக நடிக்கவும் க்ரீன் சிக்னல் கொடுத்து வருகிறார்.