ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வாகை சூடவா படத்தில் தமிழுக்கு வந்த இனியா, அதையடுத்து மெளனகுரு, அம்மாவின் கைப்பேசி, மாசாணி என பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர், பின்னர் வாய்ப்புகள் குறைந்ததால் கேரக்டர் நடிகையாக மாறினார். அந்த வகையில், தற்போது தமிழ், மலையாளம், கன்னடத்தில் பல படங்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், தற்போது தனது அக்கா ஸ்வாதியையும் சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இனியா. அதாவது, இனியாவும், ஸ்வாதியும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்தவர்கள். ஒருகட்டத்தில் இனியா சினிமாவில் ஹீரோயின் ஆனார். ஆனால் அவரது அக்காள் ஸ்வாதிக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மலையாள சீரியல்களில் நடித்து வந்தார். இப்போது அவருக்கு திருமணமாகி விட்டது.
இந்நிலையில், சினிமாவில் கேரக்டர் நடிகையாக வலம்வர அவர் ஆசைப்படுகிறாராம். அதனால் தன்னை புக் பண்ணியுள்ள சில டைரக்டர்களிடம் தன் அக்காவுக்கும் சான்ஸ் கேட்டு வரும் இனியா, என் அக்கா இமேஜ் பார்க்காமல் எந்தமாதிரியான வேடங்களிலும் நடிப்பார். குறிப்பாக, அண்ணி, அக்கா, அம்மா, வில்லி எந்த கேரக்டராக இருந்தாலும் அவருக்கு ஓகேதான் என்று கூறி வருகிறார். அதனால் இப்போது தமிழ்ப்படங்களில் இனியா நடிக்க வரும்போது அவரது அக்கா ஸ்வாதியும் கூடவே விசிட் அடிக்கிறார்.