இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர் லட்சுமிமேனன். அப்போது அவர் கேரளாவில் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அதையடுத்து சினிமாவில் பிசியானபோதும் படிப்பை விடவில்லை. இப்போதுவரை சினிமாவில் நடித்துக்கொண்டே படிப்பையும் தொடர்ந்து வருகிறார் லட்சுமிமேனன். அவரைப்போலவே இப்போது கொச்சினில் இருந்து வந்து தமிழில் சண்டிக்குதிரை படத்தில் நடித்து வரும் மானஸாவும் பள்ளியில் படித்துக்கொண்டுதான் நடிக்கிறார். தற்போது கொச்சினில் ப்ளஸ்-2 படித்து வரும் அவர், பரீட்சை இருப்பதாக அவசரப்படுத்தியதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகவேகமாக படமாக்கி அவரை அனுப்பி விட்டு மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் சண்டிக்குதிரை டைரக்டர் அன்புமதி.
மேலும், இந்த மானஸா கொச்சினைச் சேர்ந்தவராக இருந்தபோதும் மலேசியாவில்தான் பத்தாவது வரை படித்தாராம். அதையடுத்து கேரளாவில் படித்து வருகிறாராம். குறிப்பாக, லட்சுமிமேனன் பாணியில் படிப்புக்கே முதலிடம் கொடுக்கும் அவர், நடிப்பிலும் அவரை மாதிரி துளியும் கவர்ச்சி காட்டமாட்டேன் என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறார். இந்த சண்டிக்குதிரை படத்தில் பருத்திவீரன் பிரியாமணி போன்று துடுக்குத்தனமான ரோலில் நடித்திருப்பவர், அற்புதமான பர்பாமென்ஸ் கொடுத்துள்ளாராம். இந்த சேதி சினிமா வட்டாரங்களில் பரவியதை அடுத்து, மேலும் சில படங்களும் மானஸாவை தேடி வந்துள்ளதாம். ஆனால், ப்ளஸ்-2 தேர்வு எழுதி முடித்த பிறகுதான் அந்த படங்களின் கதையை கேட்பேன் என்று கூறிவிட்டாராம் மானஸா.
அதோடு, லோ-கிப் காட்சிகளில் நடிக்கக்கூட அவர் தயங்கியதால் சண்டிக்குதிரை படத்தில் எதிர்பார்த்தபடி அசைவ காட்சிகள் இல்லையாம். அதன்காரணமாக, படத்தில் ஒரு குத்துப்பாடலை இணைத்திருக்கும் டைரக்டர் அன்புமதி, தற்போது சலீம் படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே -பாடலில் நடனமாடிய பிரியங்காவை வைத்து ஒரு அதிரடியான குத்துப்பாடலை படமாக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.