வெள்ளை பன்றி நடிக்கும் ஜெட்லி: பார்வதி, அருந்ததி ஹீரோயின் - A White pig acting in tamil cinema movie titled as Jetly
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெள்ளை பன்றி நடிக்கும் 'ஜெட்லி': பார்வதி, அருந்ததி ஹீரோயின்

23 பிப், 2016 - 11:26 IST
எழுத்தின் அளவு:
A-White-pig-acting-in-tamil-cinema-movie-titled-as-Jetly

ஆடு நடிச்ச படம் பார்த்திருக்கோம், மாடு நடிச்ச படம் பார்த்திருக்கோம், நாய் நடிச்ச படம் பார்த்திருக்கோம், யானை நடிச்சு பார்த்திருக்கோம், ஏன் பாம்பு நடிச்சுகூட பார்த்திருக்கோம். ஆனால் பன்றி நடிச்ச படத்தை பார்த்திருக்கோமா.. பார்த்திருக்கோமோ... அந்த குறையை போக்க விரைவில் வருகிறது ஜெட்லி என்ற படம். இதில் பார்வதி நாயர், அருந்ததி நாயர் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். கண்ணன் பொன்னையா, ஜெகன் சாய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஜெட்லி என்ற பன்றிதான் ஹீரோ. சத்யா இசை அமைக்கிறார், துலிப்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


"மக்களின் மூட நம்பிக்கைகளை வைத்து கலாட்டாவாக தயாராகிறது இந்தப் படம். நிஜ பன்றியும், கிராபிக்ஸ் பன்றியும் இணைந்து கலக்கப்போகிறது. மக்களுக்கு அறியாமை தலை விரித்தாடுகிறது. அபசகுனம், சுபசகுனம் என்று சகுனங்களின் மேல் அதிக நம்பிக்கை வைத்துத் தான் மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை காசாக்க நினைக்கும் இருவரின் நகைச்சுவை கலாட்டா தான் 'ஜெட்லி' “ ஹாலிவுட் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள். நார்னியா, லயன் போன்ற படங்களின் மாடல் அனிமேட்டர் இதில் பணிபுரிகிறார்.


மிக உயரிய தொழில்நுட்பத்துடன் ஜெட்லி உருவாகிறது. காமெடிதான் படத்தின் உயிர் நாடி. சென்னை, திருநெல்வேலி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது" என்றார் இயக்குனர் ஜெகன் சாய்.


Advertisement
எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக அறிமுகமாகிறார்எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக ... ஹைபர்லிங் வடிவ திரைக்கதையில் 'மாநகரம்' ஹைபர்லிங் வடிவ திரைக்கதையில் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film thiri
    • திரி
    • நடிகர் : அஸ்வின் காக்மானு
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
    Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
    Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
    Tamil New Film Ivan Thandhiran
    • இவன் தந்திரன்
    • நடிகர் : கவுதம்
    • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
    • இயக்குனர் :கண்ணன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in