சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலத்தை வென்ற கலைஞன். அவரது வாரிசுகள் யாரும் அரசியலுக்கும் வரவில்லை. சினிமாவுக்கும் வரவில்லை. பல வருடங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன், கபாலி தோட்டம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்களுள் ஒருவரான சுதாவின் மகன் தான் இந்த ராமச்சந்திரன். அனிஷா என்ற புதுமுகம் ஹீரோயின், விக்கி என்ற இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார். கோலிசோடா மதுசூதனன் வில்லனாக நடிக்கிறார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி பிக்சர்ஸ் மற்றும் ட்ரான்ஸ் லிங் மீடியா இணைந்து தயாரிக்கிறது. யு.கே.முரளி இசை அமைக்கிறார்.
"தீயை தீயிட வரும் ஒரு இளைனின் கதை. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதை. படப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையிலேயே ஒரே ஷெட்யூலில் படமாகிறது. கபாலி தோட்டம் என்ற தலைப்பு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தை மனதில் வைத்து வைக்கப்படவில்லை. கதைக்கு தேவையான தலைப்பு என்பதால் வைத்திருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் டி.ஆர்.பாஸ்கர்.