டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சோனம் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'நீர்ஜா'. மறைந்த விமான பணிப்பெண் நீர்ஜா ரோலில், சோனம் கபூர் நடித்திருந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனம் கபூரிடம் பாலிவுட்டில், நடிகர்கள் அளவுக்கு நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லையே என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த சோனம், ''நான் எனது 23 வயதிலிருந்தே முக்கியத்துவம் பெற முயற்சித்து வருகிறேன். கடந்த 9 ஆண்டுகளாக என் லட்சியத்தை அடைய போராடி வருகிறேன். நான் பிரேம் ரத்தன் தன் பயோ என்ற படத்தில் நடித்தேன். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றதுடன் எனக்கும் ஒரு நல்ல ரோலை தந்தது. இந்தப்படத்திற்காக சல்மான்கான் 200 நாட்கள் நடித்தார், நான் 180 நாட்கள் பணியாற்றினேன். நடிகருக்கு சமமான ரோல், இதுவே ஒரு முன்னேற்றம் தான். என்னைப் போன்று மற்ற நடிகைகளும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்தால் முன்னேறலாம். எதிர்காலத்தில் நிச்சயம் மாற்றம் வரும்'' என்றார்.