ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்தாண்டு அறிமுகமான இசையமைப்பாளர்களில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி இருக்கிறார். தனியாக ஆல்பங்கள் இயக்கி வந்தவர், சுந்தர்.சி-யின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் இசையில் வெளிவந்த இன்று நேற்று நாளை, தனி ஒருவன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. அவற்றில் தனி ஒருவன் படத்திற்கு தனி இடமுண்டு. தற்போது தமிழில் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் ஆதிக்கு இன்று பிறந்தநாள். இந்தாண்டு தனது பிறந்தநாளை ஐதராபாத்தில் எளிமையாக கொண்டாடினார். தற்போது ஆதி, தனி ஒருவன் தெலுங்கு ரீ-மேக் படத்திற்கு முழு மூச்சாக இசை அமைத்து வருகிறார். இதில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார்.
பிறந்தநாளையொட்டி அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி... கடந்தாண்டு எனது இசையமைப்பில் வெளிவந்த படங்களின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாடல்களும் வெற்றி பெற்றன. அதேப்போல் இந்தாண்டு சிறப்பான பாடல்களை கொடுக்க கடுமையாக உழைப்பேன், தற்போது தனி ஒருவன் தெலுங்கு ரீ-மேக்கிற்கு இசையமைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.