மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
திருட்டு விசிடி, ஆத்யன் படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் தற்போது கககபோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை பி.எஸ்.விஜய் என்பவர் இயக்கி உள்ளார். விரைவில் படம் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் சாக்ஷி ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளார். நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்த சாக்ஷி, அதன் போட்டோக்களை மீடியாக்களுக்கு தரக்கூடாது, படத்தில் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று கூறியிருந்தாராம்.
ஆனால் தற்போது மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள படங்களில் சாக்ஷியின் நீச்சல் உடை படமும் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து சாக்ஷி அதிர்ச்சி அடைந்ததாகவும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த படத்தை தவறாக தந்து விட்டோம். அதனை திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து கூறியிருக்கிறார்கள்.