தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தி.மு.க., தலைவர் கருணாநிதி 1989 முதல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஓட்டுப்போடும் உரிமம் உள்ள ஆயுட்கால உறுப்பினராக இருந்தார். நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிக்கவும் வந்திருக்கிறார். ஆனால் கடந்த சில தேர்தல்களாக அவர் வரவில்லை. காரணம் அவரை ஓட்டுப்போடும் உரிமம் உள்ள உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, தொழில்முறை அல்லாத கவுரவ ஆயுட்கால உறுப்பினராக்கியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை விஷால் அணியினர் கடந்த தேர்தலின்போது எழுப்பினர்.
தற்போது மீண்டும் கருணாநிதியை ஓட்டுப்போடும் உரிமையுள்ள ஆயுட்கால உறுப்பினராக்க முடிவு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் கூடிய சங்கத்தின் செயற்குழுவில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுப்பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
தி.மு.கழக தலைவர் கருணாநிதி 100 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஆனால் எந்தப் படத்திலும் நடித்ததில்லை. அவர் கதை வசனம் எழுதும் படங்களின் ஆரம்பத்தில் தோன்றி படம் பற்றி பேசுவார். ஆனால் நாடகங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த காகிதப்பூ, உதயசூரியன் நாடங்கள் புகழ்பெற்றது. நாடக நடிகர் என்ற அடிப்படையிலேயே கருணாநிதி நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறார்.