‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தம்பியுமான உதயா, கடந்த 20 வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார், திருநெல்வேலி படத்தில் அறிமுகமான அவர் 10க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். கடைசியாக ஆவிகுமார் என்ற படத்தில் நடித்தார்.
தற்போது அவர் உத்தரவு மகாராஜா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஹீரோயின்கள் தேர்வு நடந்து வருகிறது. திருநெல்வேலி படத்திற்கு பிறகு பிரபு அவருடன் சேர்ந்து நடிக்கிறார். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், மன்சூரலிகான், நடிக்கிறார்கள். ஸ்டார் விஷன் சார்பில் கணேஷ்குமார் தயாரிக்கிறார்.
ஆஸிப் குரைசி என்ற புதுமுகம் இயக்குகிறார். பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்கிறார், இது ஒரு ரோட்சைட் த்ரில்லர் கதை. ஏப்ரல் மாதம் 15ந் தேதி ஊட்டியில் படப்பிடிப்பு தொடஙங்குகிறது. தற்போது டெஸ்ட்சூட் எனப்படம், சோதனை படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.