ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பி.சி.அன்பழகன் இயக்கிய நதிகள் நனைவதில்லை படத்தில் தங்கை வேடத்தில் நடித்தவர் மலையாள நடிகை கல்யாணி நாயர். மலையாளத்தில் கதாநாயகியாக நடித்திருந்தபோதும் தமிழில் ஒரு என்ட்ரிக்காக அந்த படத்தில் தங்கையாக நடித்தார். அதையடுத்து புதுசா நான் பொறந்தேன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அவர், மோகனா என்ற பேய் படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தில் டாக்டர் சீனிவாசன் கதையின் நாயகனாக நடிக்க, மொட்டை ராஜேந்திரன் ஊர் ஜமீந்தார் வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கல்யாணி நாயர் நடித்திருக்கிறாராம். கதைப்படி நான்கடவுள் ராஜேந்திரன் வில்லன் என்றாலும், கல்யாணி நாயருக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிற வேடமாம். அதனால் இந்த படத்தில் வில்லத்தனம், ரொமான்ஸ் என இரண்டுவிதமான பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறாராம் ராஜேந்திரன்.