‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் சினிமாவில் பல சோதனை முயற்சிகளை பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்தவர் கமல்ஹாசன். அவருடைய பல படங்கள் அன்றைய சாதாரண ரசிகர்களுக்குச் சென்று சேரவில்லை என்பதுதான் உண்மை. அந்த வரிசையில் இடம் பெற்ற படங்களில் ஒன்று 'ஹே ராம்'. சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் நடந்த கதையாக வெளிவந்த இந்தப் படம் வெளிவந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஷாரூக்கான் தமிழில் நடித்த முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. ராணி முகர்ஜி, ஹேமமாலினி, அதுல் குல்கர்னி, கிரிஷ் கர்னார்ட், நஸ்ருதீன் ஷா, நாசர், வசுந்தரா தாஸ் என இந்தியத் திரையுலகில் குறிப்பிடத்தக்க பல சிறந்த நட்சத்திரங்கள் நடித்த படம் இது.
கமல்ஹாசன் எழுதி இயக்கி நாயகனாக நடித்த இந்தப் படத்தின் திரைக்கதைதான் பலரையும் குழப்பிவிட்டது. இன்றும் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு சரியாகப் புரியுமா என்பது சந்தேகம்தான். ஆனாலும், கதை சொல்லலிலும், திரைக்கதை அமைப்பிலும் மிகப் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்திய படம் இது. அப்படிப்பட்ட படம் இந்தக் காலத்தில் வந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் பெற்றிருக்கும். ஆனால், 16 வருடங்களுக்கு முன்பே வந்ததுதான் தவறாக இருக்கலாம்.
இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் நம்மை வேறு உலகத்திற்கே அழைத்துச் சென்ற படம்.
கமல்ஹாசன் ஒரு சகல கலா வல்லவன் என்பதை மீண்டும் நிரூபித்ததில் இந்தப் படத்திற்கு பெரிய பங்கு உண்டு.