யூப்-டிவி இணையதளத்தில் ஆசிய கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட் - YuppTV bags the exclusive digital media rights for the Asia Cup 2016
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

யூப்-டிவி இணையதளத்தில் ஆசிய கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட்

15 பிப், 2016 - 15:52 IST
எழுத்தின் அளவு:
YuppTV-bags-the-exclusive-digital-media-rights-for-the-Asia-Cup-2016

பிரபல இணையதள டிவி சேனல் யூப் டிவி. இந்த இணையதளம் பல்வேறு தொழில்நுட்பம் சாதனங்களை வளர்த்து கொண்டே வருகிறது. மேலும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புதிய புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இம்மாதம் ஆசிய கோப்பைக்கான டுவென்டி-20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற பிப்.24ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த கிரிக்கெட் போட்டியை இனி யூப் டிவியின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக பார்க்க முடியும். இதற்கான டிஜிட்டல் உரிமைத்தை யூப்-டிவி இணையதளம் பெற்றுள்ளது.


இதன்மூலம் ஆசிய டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியை யூப்-டியின் ஸ்மார்ட் டிவி, யூப்டிவி இணையதளம், லேப்டாப், ஸ்மார்ட் போன்ஸ் மற்றும் டேப்லட் போன்றவற்றிலும் காணலாம். இதை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் யூப்டிவி டிஜிட்டல் மீடியா வாயிலாக பார்க்க முடியும்.


இதுகுறித்து யூப்-டியின் தலைமை அதிகாரி உதய் ரெட்டி கூறுகையில், எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாட்டிற்கு என தனி மவுசு உள்ளது. குறிப்பாக தெற்கு ஆசியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு யூப்-டிவி இணையதளம், ஆசிய கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியை டிஜிட்டல் வாயிலாக நேரடியாக வழங்க உள்ளது. இதற்கான உரிமையை நாங்கள் பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.


Advertisement
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தது ஏன்? - ராதிகாதயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ... சின்னத்திரையில் தொடர்ந்து பயணிப்பேன் - ஸ்வேதா சின்னத்திரையில் தொடர்ந்து ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
  Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
  Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
  Tamil New Film Ivan Thandhiran
  • இவன் தந்திரன்
  • நடிகர் : கவுதம்
  • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
  • இயக்குனர் :கண்ணன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in