Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூகுள் அலுவலகத்தில் கமல்ஹாசன்

15 பிப், 2016 - 14:22 IST
எழுத்தின் அளவு:
Kamal-in-Google-office

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றச் சென்ற கமல்ஹாசன் தொடர்ந்து அமெரிக்காவில் சில நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். பாஸ்டன் நகரில் உள்ள கூகுள் அலுவலகத்திற்கும் கமல்ஹாசன் சென்றுள்ளார். அங்குள்ள நிர்வாகிகளுடனும், பணியாளர்களுடனும் விவாதம் மற்றும் உரையாடலில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். கமலுடன் கூகுள் பணியாளர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர்.


அது பற்றிய புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கூகுள் அலுவலகப் பயணம் குறித்தும் கமல் கருத்து தெரிவித்துள்ளார். “கூகுளையே கூகுள் செய்து, சில கூகுளர்களுடனும் நிர்வகித்த போது,” என மகிழ்ச்சியுடன் கமல் பதிவிட்டிருக்கிறார். கமல்ஹாசன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில்தான் டிவிட்டரில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் 'உலகநாயகன் டியூப்' என்ற யு டியூப் வீடியோ தளம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.


தொழில்நுட்பம் மாற மாற அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகர்களில் முதன்மையாக இருப்பவர் கமல்ஹாசன். ஆவிட் எடிட்டிங், டிஜிட்டல் சினிமாவில் இருந்து தற்போதைய டிவிட்டர் வரை தன் தனித்துவத்தில் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in