திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குனர் சுகுமார் திரைக்கதை அமைத்து தயாரித்த குமாரி 21 எப் படத்தில் துணிச்சலான நாயகி வேடம் ஏற்று நடித்த ஹீப்பா பட்டேல் பலரது பாராட்டையும் பெற்றார். குமாரி 21 எப் படத்தின் வெற்றிக்கு பின்னர் டோலிவுட்டின் இரண்டாம் நிலை நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு ஹீப்பா பட்டேலுக்கு கிடைத்துள்ளது. எக்ஸ்பிரஸ் ராஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் சர்வானந்த் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஹீப்பா பட்டேல் ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தை ரா ரா கிருஷ்ணய்யா படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் மகேஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மெய்டன் புரொடக்ஷன்ஸ் சார்பில் கேசினேனி நாணி இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகின்றது.