இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிவகார்த்த்கேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் திருக்குமரன் இயக்கி மான் கரத்தே படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழில் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கில் துந்தரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. நடிகர் நர ரோஹித் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை லதா ஹெட்டேக் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தை நாகார்ஜுனாவுடன் இணைந்து தயாரிப்பாளர் அசோக் தயாரிக்கின்றார். குண்டேலோ கோதாரி படப் புகழ் இயக்குனர் குமார் நாகேந்திரா இப்படத்தை இயக்குகின்றார். இசையமைப்பாளர் சாய் கார்த்திக் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இறுதி கட்ட படப்பிடிப்பில் இருந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை மார்ச் 4 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.