Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

காதலர் தின ஸ்பெஷல் : நட்சத்திரங்களின் கருத்துக்கள்

14 பிப், 2016 - 09:42 IST
எழுத்தின் அளவு:
Valentine-day-special-article

கண்களில் தொடங்கி இதயத்தில் முடியும் ஸ்பரிசம் காதல், சொல்லமுடியாத உணர்வுகளை , சொல்லகூடிய உறவு காதல் , காதலை பாடாத கவிஞர்கள் இல்லை, வர்ணிக்காத வார்த்தைகள் இல்லை, விழியில் தொடங்கி , வானம் , மலர் ,மனசு,துப்பட்டா ,கொலுசு , கொஞ்சும் மொழி , பறக்கும் பட்டாம்பூச்சி என எண்ணங்களை வண்ணங்கலாக்கிய காதல் கொண்டாடும் கவிதைகள் காதலர்களின் தினத்தில் திருவிழா தான் , இன்றைய காதலர் தினத்தில் பிரபலங்கள் சிலர் காதலை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்


மிஷா


காதல் எப்போதும் ஒரு பொழுது போக்காக மட்டும் இல்லாமல் ,இவனுகாக அவளும், அவளுக்காக இவனும் ,அவளுக்காக எது வேணா செய்வேன் அவனுக்காக எதுவேணா


செய்வேன் என்று மனசு சொல்லணும் ,ஒருத்தர் இன்னிக்கு இன்னொருத்தர் நாளைக்கு என்று இருந்தால் அதற்கு பேர் காதல் இல்லை ,காதல் எப்போதும் காலம் முழுக்க கூடவே நம்மோடு பயணிக்கணும் ,அந்த காதலில் உண்மை இருக்கனும் என்பது ரொம்ப முக்கியம்.


பாவனா


காதல் என்பது நம்பிக்கை ,புரிந்து கொள்ளுதல் ,பாசம், சின்ன மரியாதை,மதிப்பு இதெல்லாம் சேர்ந்தது தான் காதல் , ஹோட்டல் போய் சாப்பிடுவதும் , வெளியில் கூப்பிட்டு போவதும் ,ரோஸ் வாந்தி தருவதும் காதலின் முதல் படி தான் ,ஆனால் உண்மையான காதல் எத்தனை வருஷம் ஆனாலும் அதே காதல் கூடவே இருக்க ,வேண்டும்


காயத்ரி


அழகான நட்பு காதல் ,அதை ரொம்பவே பாதுகாத்து வைக்கப்படனும்


ஸ்ரீதிவ்யா


எல்லாருக்கும் காதல் அவசியமான ஒன்று ,அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் இருக்க வேண்டும் என்பதில்லை , குடும்பத்தில் எல்லார் மேலவும் காதல் இருக்கனும்,நம்மை நாம் நேசிக்கணும் ,நாம் பார்க்கும் வேலையை நேசிக்கணும் , நான் என் சினிமா வேலையை ரொம்பவே செய்றேன் அதனால் தான் வெற்றியை தர முடிகிறது ,ப்ளீஸ் உங்களை காதலிங்க, இந்த உலகத்தை காதலிங்க.


சிம்ரன்


வாழ்க்கையின் மொத்த சந்தோஷம் காதல் தான் ,கணவன் மனைவிக்குள் மட்டும் இருபது காதல் இல்லை ,அப்பா அம்மா குழந்தைகள் இப்டி எல்லார் மேலவும் காதல்


இருக்க வேண்டும் ,காதலை காதலர் தினத்தில் நேசிக்க கற்று கொள்ளுங்கள், நேசிக்க கற்று கொடுங்கள்.


மா கா பா ஆனந்த்


காதல் ஒருத்தரை அப்டியே அடுத்த கட்டத்துக்கு அலேக்கா கூட்டி போகணும்,அப்டியே மனசுக்குள்ள பொங்கிட்டு ஒருத்தர் மேல காதல் வரணும்,அத விட்டு அந்த காதல் உங்களை கஷ்டபடுத்துது ,காயப் படுத்துது என்று இருந்தால் அங்க காதல் இல்லை என அர்த்தம் ,அப்டியே அதை தூக்கி வச்சிட்டு உங்க மேல உங்க வேலை மேல கவனம் செலுத்தினா , அப்ப வரும் பாருங்க ஒரு காதல்.


பார்த்திபன்


நினைபதெல்லாம் காதல் ,நினைவெல்லாம் காதல் ,காதல் ஒருவனின் ஆக்ஸிஜன், வாழும் வரை கூடவே வாழும்.


ஹன்சிகா


காதல் என்பது ஒரு அழகான அனுபவம் ,நாம் வாழும் நாட்களில் ஒரு முறையாவது அதை உணர வேண்டும்.


கீர்த்திசுரேஷ்


காதல் ஒரு புனிதமானது ,காதலை உணரத்தான் முடியும் ,உணர்த்த முடியாத பீலிங்


நகுல்


காதல் என்பது இனம்புரியாத அற்புதமான அழகான உணர்ச்சி ,அதை உணர்வது கிட்டத்தட்ட இதயத்தின் துடிப்பு போல.


பிந்து மாதவி


காதல் ஒரு இனிமையான ஒரு வலி ,அது ஒவ் வ ருவரின் உணர்ச்சிகளை சார்ந்தது, ஒருவரை இழக்கும் போதும் ,ஒருவரை பிரியும் போதும் காதல் வலியை கண்டிப்பா


வார்த்தைக்குள் அடக்கி விடமுடியாது , அன்பு செலுத்துவோம், அன்பை பெறுவோம்.


விமல்


காதலித்து திருமணம் செய்தவன் நான் ,வாழ்ந்து மகிழும் அளவை வார்த்தைகளால் சொல்ல தெரியவில்லை ,ஆதலால் காதல் செய்வீர்.


ஹரிஷ் கல்யாண்


காதல் ஒரு தாயை போன்றது , வேறு வார்த்தை தெரியவில்லை, அவ்ளோ உண்மையா நாம் இருக்கணும் ,வெறும் கேளிக்கை விருந்தோடு காதல் முடிந்து விட கூடாது, வாழும் நாள் எல்லாம் காதல் கூடவே வாழ வைக்கணும்.


ரித்விகா


புனிதமான காதல் என்பதை எந்த விலை கொடுத்ததும் வாங்க முடியாது,எந்த எதிபார்ப்பும் இல்லாத ஒன்றை மட்டுமே புனிதமான காதல் என்கிறோம்


வேதிகா


ஆத்மார்த்தமான காதலே அழகானது ,அதை அடைவதற்கு முன் அதற்கு உங்களை உண்மையா கொடுக்க வேண்டும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in