டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கரண் ஜோகர் தயாரிப்பில், சவுகான் பத்ரா இயக்கத்தில், பவாத்கான், சித்தார்த் மல்கோத்ரா, ஆலியாபட் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் கபூர் அண்ட் சன்ஸ். இப்படத்தில் ரிஷி கபூர், 85 வயது முதியவராக நடிக்கிறார். ரெமான்ஸ், குடும்ப சென்ட்டிமென்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இருதினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அப்போது ஆலியாபட்டிடம் 'கபூர் அண்ட் சன்ஸ்' படத்திற்கும், 'ஷாந்தார்' படத்திற்கும் எதுவும் தொடர்பு உண்டா என்று கேட்டபோது, ஆலியா மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியதாவது... சாந்தார் படத்திற்கும், கபூர் அண்ட் சன்ஸ் படத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எங்கிருந்து இதுபோன்ற செய்தி வருகிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
கபூர் அண்ட் சன்ஸ் படம் மார்ச் 18ம் தேதி வெளியாக உள்ளது.