விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
கதகளி' படத்தைத் தொடர்ந்து தற்போது 'மருது' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். விஷாலின் அடுத்தப் படமாக மருது படம்தான் வெளிவரப்போகிறது என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துவரும்நிலையில் அவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ். என்ன? விஷாலின் அடுத்தப் படமாக வரவிருப்பது மருது அல்ல, மதகஜராஜா
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து, நீண்டநாட்களாக ரிலீஸாகமல் இருக்கும் படம் 'மத கஜ ராஜா'. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த 'மத கஜ ராஜா' படத்தின் தயாரிப்பாளர் கடன் பிரச்சனை காரணமாக நீண்டநாட்களாக ரிலீஸாகமல் தள்ளிக்கொண்டே இருந்தது.
இந்நிலையில், மத கஜ ராஜா படத்தை வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம். சுந்தர்.சி.யின் அரண்மனை, அரண்மனை 2 படங்கள் ஆகிய இரண்டு படங்களும் வரிசையாக ஹிட்டாகியிருப்பதால், இந்த நேரத்தில் 'மத கஜ ராஜா'வை நல்ல விலைக்கு பிசினஸ் செய்ய முடியும் என்பதாலும், படத்துக்கு நல்ல ஓபனிங் இருக்கும் என்பதாலும் இந்த முயற்சியை செய்ய உள்ளனர்.
ஏற்கனவே விஷால் இப்படியொரு முயற்சியில் இறங்கி தோற்றுப்போனார். இம்முறை விநியோகஸ்தர்களே மத கஜ ராஜா படத்தை வாங்கி வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதால் இந்தமுறை படம் வெளிவருவதில் பிரச்சனை இருக்காது என்று சொல்லப்படுகிறது. சில நாட்களில் முக்கியமான சில விநியோகஸ்தர்களை அழைத்து, 'மத கஜ ராஜா' படத்தை அவர்களுக்கு திரையிட்டுக் காட்ட இருக்கிறார்களாம்.