Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கும்கி -2 படத்தில் நடிக்க மறுத்த லட்சுமி மேனன்

13 பிப், 2016 - 10:22 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-menon-says-no-to-Kumki-2

தற்போது தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடிக்கும் மிரட்டு படத்தை இயக்கி வருகிறார் பிரபுசாலமன். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அந்த பணிகள் முடிய சில மாதங்களாகுமாம். எனவே கோடை விடுமுறைக்குத்தான் மிரட்டு படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.


மிரட்டு படத்தை அடுத்து கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் பிரபுசாலமன். லிங்குசாமி தயாரிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான கும்கி படத்தின் கதையமைப்பும், காட்சிகளும் ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமின்றி, இமான் இசையமைப்பில் இப்படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட்டாகின.


தற்போது, கும்கி 2ஆம் பாகத்துக்கான கதையை தயாராக வைத்திருக்கிறார் பிரபுசாலமன். கும்கி படத்தை விட பிரம்மாண்டமான படமாக எடுக்க எண்ணி இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறாராம் பிரபுசாலமன். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் இருவருக்கும் கும்கி படம்தான் முதல் படம். தற்போது முன்னணி நட்சத்திரங்களாகிவிட்ட அவர்களையே இரண்டாவது பாகத்தில் நடிக்க வைக்க எண்ணியுள்ளார் பிரபுசாலமன். லட்சுமிமேனனிடம் இது பற்றி பேசியபோது, அவர் கும்கி - 2 படத்தில் நடிக்க விருப்பமில்லை என்பதை நாசூக்காக சொல்லி அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in