இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் சண்டை வராமல் இருக்காது. படத்துக்கு பூஜை போட்டது முதல் ரிலீஸ் ஆகும் வரை தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒற்றுமையாக இருந்தால் ஆச்சர்யம். அப்படி ஒரு ஆச்சர்யம் தான் இந்த செய்தி. 'மைனா', 'சாட்டை', 'மொசக்குட்டி' போன்ற படங்களை தயாரித்த 'ஷாலோம் ஸ்டுடியோஸ்' சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சவுகார்பேட்டை'.
ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், கதாநாயகியாக ராய் லட்சுமி நடித்துள்ள இப்படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார். இப்படத்தை வருகிற 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். சவுகார்பேட்டை படத்தை தொடர்ந்து இதே நிறுனத்திற்காக பொட்டு என்ற படத்தை இயக்குகிறார் வடிவுடையான். பரத், நமீதா, இனியா முதலானோர் நடிக்கும் 'பொட்டு' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
'பொட்டு' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் இதே நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் வடிவுடையான். 'சவுகார்பேட்டை' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஸ்ரீகாந்தே இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஒரு படம் வெளியாவதற்கு முன்னாடியே அதே நிறுவனத்திற்கு ஒரு படத்தை அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிதான விஷயம். அந்த வாய்ப்பு வடிவுடையானுக்கு கிடைத்திருக்கிறது.
வெரிகுட்.