ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் மகன் ஏ.ஆர். அமீன் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படத்தில் ஒரு இறை பாடலைப் பாடியிருந்தார். அதன் பிறகு அவர் வேறு எந்தப் படத்திலும் பாடவில்லை. தற்போது தெலுங்கில் 'நிர்மலா கான்வென்ட்' என்ற படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். தெலுங்கில் அமீன் பாடுவது இதுவே முதல் முறை.
இந்தப் படத்தை நாகார்ஜுனா தயாரித்துள்ளார். தெலுங்கு நட்சத்திர ஜோடியான ஸ்ரீகாந்த் - சிவரஞ்சனியின் மூத்த மகன் ரோஷன் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். படத்திற்கு தெலுங்கு இசையமைப்பாளர் கோட்டியின் மகன் ரோஷன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்காகத்தான் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் ஒரு பாடலைப் பாடியுள்ளார். பாடல் சிறப்பாக வந்துள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்று இந்தப் பாடலை வெளியிட உள்ளார்கள்.
நாக கோடீஸ்வரராவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷ்ரேயா ஷர்மா நாயகியாக நடிக்கிறார்.