தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமான மன்சூரலிகான், கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்தன் மூலம் புகழ்பெற்றார். பல படங்களில் வில்லனாக நடித்த அவர் ராஜ் கென்னடி பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சொந்த படம் எடுத்து அதில் தானே ஹீரோவாக நடித்தார். நீளமான தலைப்பு வைப்பது, படம் ஓடாவிட்டாலும் 100வது நாள் போஸ்டர் அடிப்பது. படத்தின் பாடல் சிடியை கூடையில் வைத்து விற்பது என்று அடிக்கடி சில அதிரடிகளை செய்வார். கடைசியாக அதிரடி என்ற பெயரில் ஒரு படம் எடுத்தார். அதன் 100வது நாள் போஸ்டரை ஒட்டியதும் அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டார்.
அதன் பெயர் பூதாளம் (அஜீத் நடித்த வேதாளம் படத்திற்கு போட்டியாம்). இதில் அவர் ஏழை விவசாயிகளின் வாழ்க்கையை சொல்லப்போகிறாராம். நடிப்பு, இசை, இயக்கம், கதை, வசனம் எல்லாமே அவர்தான். ஒளிப்பதிவு மட்டும் வேறொருவர் செய்கிறாராம். இந்தப் படத்தில் அதிரடியாக தனது மகன்கள் மஹபீர், கஜினி, மகள் ஜுலைஹா ஆகியோரை தனது பேரன் பேத்திகளாக நடிக்க வைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறார். அவர் 70 வயது விவசாயியாக நடிக்கிறார்.