இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நாகார்ஜுனாவுடன் கார்த்தி இணைந்து நடிக்கும் திரைப்படம் தெலுங்கில் ஊபிரி என்ற பெயரிலும் தமிழில் தோழா என்ற பெயரிலும் திரைக்கு தயாராகி வருகின்றது. பிரஞ்சு திரைப்படமான தி இண்டச்சபிள்ஸ் என்ற படத்தை தழுவி இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகின்றார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை தமன்னா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கின்றார். நாகார்ஜுனாவின் முன்னாள் காதலியாக நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ள இப்படத்தின் டீசரை வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். மார்ச் 25 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.