ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் இயக்கி வரும் படம் காஷ்மோரா. இந்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க அவருடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதற்கு முந்தைய படங்களில் தனது கெட்டப் விசயத்தில் பெரிதாக ஆர்வம் காட்டாத கார்த்தி இப்படத்தில் முதன்முறையாக சில கெட்டப்புகளில் தோன்றுகிறாராம். அதில் ஒன்றுதான் மொட்டை கெட்டப்.
இந்த கெட்டப்பில்தான் தற்போது கார்த்தி நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், முழுக்க முழுக்க தலையில் மொட்டை அடித்துள்ளாரா? இல்லை சிறிய அளவில் முடி வைத்திருக்கிறாரா என்பது தெரியாத அளவுக்கு தலையில் தொப்பி வைத்தபடியே வெளியில் தலைகாட்டி வருகிறார் கார்த்தி. அதோடு காஷ்மோரா படம் பற்றிய தகவல்கள் இப்போதே கசிந்து விடக்கூடாது என்பதால் பலத்த செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
அதோடு, காஷ்மோரா படம் குறித்து கார்த்தியிடம் கேட்டால், நான் நடித்ததில் இது வித்தியாசமான படமாக இருக்கும். இந்த படத்திற்காக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் கார்த்தி.