Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நம்பிக்கை தான் காதல் - கத்ரீனா கைப்

11 பிப், 2016 - 22:44 IST
எழுத்தின் அளவு:
Love-is-Faith-says-Katrina

பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகைகளில் கத்ரீனா கைப்பும் ஒருவர். ஒல்லியான உடலமைப்பு, வசீகரிக்கும் பார்வை, அசத்தலான நடிப்பு என வலம் வரும் கத்ரீனாவின் நடிப்பில் வௌியாக உள்ள படம் பிட்டூர். இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்தும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது...


பிட்டூர் என்றால் என்ன.?


ஒருவித உணர்வு தான் பிட்டூர். உதாரணத்திற்கு சொல்லணும் என்றால் சினிமாவில் நான் புதிதாக அறிமுகமாகிறேன் என்றால் அப்போது எனக்குள் ஒருவித உணர்வு இருக்கும். சிலர் நான் அந்த துறையில் ஜெயிக்க மாட்டேன் என்பார்கள், சிலர் நான் ஜெயிப்பேன் என்பார்கள். ஆனால் ஒரு நடிகையாக நான் எனது திறமையை நிரூபிக்க வேண்டும். அதுதான் பிட்டூர்.


இது எந்தமாதிரியான படம்.?


பிட்டூர் ஒரு அழகிய காதல் ப்ளஸ் குடும்ப படம். என்னுடைய பேவரிட் படங்களே காதல் படங்கள் தான். இதுவும் அப்படி தான். பொதுவாக காதல் படங்கள் தான் ரசிகர்களை சீக்கிரம் கவர்ந்து விடும். பொதுவாக காதல் படங்கள் சிலரை சேர்த்து வைக்கும் ஆற்றல் படைத்தது. இன்னும் சொல்லப்போனால் சிலரின் மனதையும் மாற்றக்கூடிய சக்தி காதல் படத்திற்கு உண்டு.


ஹிந்தி பேச எவ்வளவு சிரமமாக உள்ளது.?


இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் என்னால் சரிவர ஹிந்தி பேச முடியவில்லை. இது தான் ஆரம்பத்திலிருந்து இப்போது வரை நான் படும் பெரிய கஷ்டம். தினமும் ஹிந்தி பேச நான் பயிற்சி எடுக்கிறேன். பொதுவாக ஒருவரின் பலம் என்ன பலவீனம் என்ன என்று அவரவருக்கு தெரியும், என்னுடைய பலவீனம் ஹிந்தி பேசுவது தான்.


தபு உங்கள் அம்மாவாக நடித்துள்ளார், இந்த அனுபவம் பற்றி சொல்லுங்க.?


சிரிக்கிறார். ஆமாம், இந்தப்படத்தில் தபு என்னுடைய அம்மாவாக நடித்துள்ளார். அவருடைய மகளாக நடிக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். மேலும் அவரை அம்மா என்று அழைக்கவும் சிரமமாக இருந்தது. இயக்குநர் அப்படி அழைக்க சொன்னதால் அவ்வாறு செய்தேன். உண்மையில் அவர் என்னுடைய சகோதரி போன்றவர், இந்தப்படத்திற்கு பிறகு நானும், அவரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.


உங்கள் பார்வையில் இருந்து காதலுக்கு உண்மையான விளக்க சொல்லுங்க.?


என்னை பொறுத்தவரை காதல் என்பது உண்மையும், நம்பிக்கையும் தான். நம்பிக்கை இருந்தால் அந்த காதல் தோற்காது, ஒருவேளை அப்படி இல்லை என்றால் அந்த காதல் என்றும் சேராது. காதல் என்பது அழகான உணர்வு. அது எல்லோரது வாழ்க்கையிலும் இருக்கும். அந்த உணர்வு பிட்டூர் படத்திலும் பிரதிபலிக்கும்.


உங்களின் பலம் என்ன.?


நான் கடவுளை நம்புபவள், அவர் தான் என்னுடைய பெரிய பலம். என் குடும்பம் பெரிய பின்புலம் உடையது கிடையாது. நான் எனது அம்மா, சகோதரி ஆகியோரை சார்ந்து தான் உள்ளேன். ஒருவனுக்கு எந்த ஆதரவும் இல்லை என்றால், அவர் கடவுளை தான் நம்புவார். கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார். நல்லது, கெட்டது எல்லாமும் அவருக்கு தெரியும்.


உங்களை பற்றி வரும் காதல் கிசுகிசு பற்றி படிக்கும் போது, உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.?


என்னை பொறுத்தவரை சினிமாவை சினிமாவாக பார்க்கணும், தனிப்பட்ட விஷயத்தை தனிப்பட்டதாக தான் பார்க்கணும். இல்லாவிட்டால் சினிமா மற்றும் ரியல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. செய்திதாளில் வௌியாகும் எல்லா செய்திக்கும் விளக்கம் தர முடியாது, அதற்கான நேரமும் கிடைக்காது. இப்போது நான் பேட்டி கொடுக்கிறேன் என்றால் அது எனது சினிமா தொழிலுக்காக., இது எனது வேலை. அவ்வளவு தான்.


இவ்வாறு கத்ரீனா கைப் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in