'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடிக்க மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திர்ஷ்யம் படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வசூலை அள்ளியது. தெலுங்கு திர்ஷ்யம் படத்தில் வெங்கடேஷ் மீனா நடித்திருந்தனர். தெலுங்கிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தமிழில் மாதவன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், திலீப் நடிப்பில் வெளிவந்த மலையாள வெற்றி திரைப்படமான டூ கன்ட்ரீஸ் எனும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கின்றார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. பாபு பங்காராம் படத்தில் நடித்து வரும் வெங்கடேஷ் நேனு சைலஜா படத்தின் இயக்குனர் கிஷோர் திருமலா இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.