ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் கிங் என ரசிகர்கள் அன்போடு அழைக்கும் நாகார்ஜுனா தனது இரண்டும் மகன்கள் கதாநாயகன்களாக நடிக்க வந்த பின்னரும் அவர்களுடன் போட்டி போட்டு நாயகனாகவே நடித்து வருகின்றார். நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்த சொக்கடே சின்னி நயன திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்புடன் ரூ45 கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளியது. அப்படத்தில் பங்கர்ராஜு எனும் பேய் வேடத்தில் நாகார்ஜுனா நடித்திருந்தார். பங்கர்ராஜு கதாபாத்திரத்தின் வெற்றியின் காரணமாக நாகார்ஜுனா தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பங்கர்ராஜு என பெயரிட்டுள்ளனர். அத்தலைப்பை நாகார்ஜுனா பதிவு செய்து வைத்துள்ளார். இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கவிருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. மேலும் இப்படத்தை அடுத்த பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.