ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சித்தார்த் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துள்ள ஜில் ஜங் ஜக் என்ற படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக என்னவெல்லாமோ செய்து வருகிறார் சித்தார்த். அதில் ஒன்றுதான்... நாகூர் பிரியாணி.... உளுந்துர்பேட்டை தெருநாள் என்று சர்ச்சையைக் கிளப்பிய சித்தார்த்தின் ட்வீட். ஜில் ஜங் ஜக் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க சித்தார்த்தின் லேட்டஸ்ட் வழி... புதிய புரமோ வீடியோ.
சித்தார்த்தை ஒரு சிறுவன் கலாய்ப்பதுபோல் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோ ரசிக்கும்படி உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் சித்தார்த்தையும், ஜில் ஜங் ஜக் படத்தையும் கலாய்ப்பதுபோல் அந்த வீடியோ எடுக்கப்பட்டதுபோல் தோன்றும்.
உண்மையில் ஜில் ஜங் ஜக் தமிழ் சினிமாவையும், நடிகை சமந்தாவையும், இயக்குநர்கள் மிஷ்கின், சுந்தர்.சியை நக்கலடிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. சமந்தா சித்தார்த்தின் முன்னாள் காதலி, சுந்தர்.சி அரண்மனை - 2 படத்தில் சித்தார்த்தை டம்மியாக்கியவர்...அதனால் இவர்களை சித்தார்த் நக்கலடித்ததில் லாஜிக் இருக்கிறது.
மிஷ்கினை ஏன் கிண்டல் செய்கிறார்?