ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
'தெறி' படத்தின் டீசர் வரும் வரை அது 'வேதாளம்' பட டீசர் சாதனையை முறியடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், டீசர் வெளியான அன்று நள்ளிரவில் கூட விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்து விடாமல் லைக் பட்டனை அழுத்தியதால் அன்றே 1 லட்சம் லைக்குகளைக் கடந்து 'தெறி' டீசர் சாதனை படைத்தது. அடுத்த சில நாட்களில் 2 லட்சம் லைக்குகளைக் கடந்து இந்தியத் திரையுலகில் புதிய சாதனையை படைத்தது.
தற்போது 60 லட்சம் ஹிட்ஸ்களைக் கடக்க உள்ள 'தெறி' டீசர் விரைவில் 'வேதாளம்' டீசரின் ஹிட்ஸ் சாதனையை முறியடிக்க உள்ளது. 'வேதாளம்' டீசரை இதுவரை 63 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் அந்த சாதனையை 'தெறி' டீசர் முறியடித்து விடும். 'வேதாளம்' டீசர் 60 லட்சம் ஹிட்ஸைக் கடக்க 4 மாதங்கள் ஆகியிருக்கிறது. ஆனால், 'தெறி' டீசர் அந்த சாதனையை ஆறே நாட்களில் முறியடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
டீசரிலேயே மிகப் பெரிய சாதனையைப் படைத்து வரும் 'தெறி' படம் அடுத்து இசை வெளியீட்டிலும், டிரைலர் வெளியீட்டிலும் மேலும் சில சாதனைகளைப் படைக்கும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.