பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
அபியும் நானும் படத்தில் த்ரிஷாவின் கணவராக நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். அதைத் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், கோ, தீயா வேலை செய்யனும் குமாரு, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் என பல படங்களில் நடித்தவர் அவர் தற்போது திரிஷாவுடன் நாயகி மற்றும் பிரபுசாலமனின் ரயில் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இதில் நாயகி படத்தில் சரித்திர படம் போன்ற ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் அவர், ரயில் படத்தில் தனுசுக்கு உதவி செய்வது போன்ற ஒரு வேடத்தில் நடித்திருக்கிறாராம். மேலும், இதுவரை பாசிட்டீவான வேடங்களிலேயே அதிகமாக நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராமன், அடுத்தபடியாக வில்லனாக நடிக்கவும் தயாராக இருப்பதாக சொல்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் ஒரு நடிகன். அதனால் இந்த மாதிரிதான் நடிப்பேன் என்று சொல்லமாட்டேன். என்னை நம்பி இயக்குனர்கள் எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். முக்கியமாக வில்லனாக நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன். தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் நான் வில்லனாக நடித்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் தமிழிலும் நெகடீவ் வேடங்களில் நடித்து மாறுபட்ட நடிகனாகவும் என்னை நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார் கணேஷ்வெங்கட்ராமன்.