‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் மகனும், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் தம்பியுமான அல்லு சிரிஷும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். அல்லு சிரிஷுடன் இணைந்து டோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை யாமி கௌதம் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். மொகஞ்சதாரோ படத்தில் நடித்து வரும் ஹிருத்திக் அப்படத்தைத் தொடர்ந்து சஞ்சய் குப்தா இயக்கத்தில் காபிலி எனும் படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இப்படம் குறித்து ஹிருத்திக் ரோஷன் மற்றும் யாமி கௌதம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.