ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷ் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், 'ஆடுகளம்' முருகதாஸ், 'கயல்' ஆனந்தி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'விசாரணை'. ஆந்திர காவல் துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று பேர், தமிழ்நாடு காவல் துறைஉதவியால் இங்கு அழைத்து வரப்படுகிறார்கள். வந்த இடத்திலும் காப்பாற்றி அழைத்து வந்த தமிழ்நாடு காவல் துறையே அவர்களை எப்படி பலி வாங்குகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தை திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பார்த்துப் பாராட்டி வருகிறார்கள். ஏற்கெனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பலர் பாராட்டினார்கள். இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குனர் பிரியதர்ஷன் இயக்குனர் வெற்றிமாறனை வெகுவாகப் பாராட்டினாராம். அதோடு உடனேயே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையையும் வாங்கி விட்டாராம். ஹிந்தியில் அவருடைய நண்பரான நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து இந்தப் படத்தை இயக்கவும் திட்டமிடுள்ளாராம். இந்தப் படம் பாலிவுட்டிலும் நாளை திரையிட்டுக் காட்டப்படுகிறது.
தமிழைப் போலவே ஹிந்தியிலும் இந்தப் படத்தை வெற்றி பெற வைக்க முடியும் என்று இயக்குனர் பிரியதர்ஷன் உறுதியாக நம்புகிறாராம். ஏற்கெனவே, தென்னிந்திய மொழிப் படங்கள் பலவற்றை ஹிந்தியில் ரீமேக் செய்தவர் பிரியதர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.