பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஷாலினியின் தங்கை ஷாமிலி. அஞ்சலியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் பல படங்களில் நடித்து வந்த அவர், படிப்பின் மீதிருந்த ஆர்வத்தில் வெளிநாடு சென்று சில ஆண்டுகளாக படித்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். விக்ரம்பிரபு நடிக்கும் வீரசிவாஜி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து தனுஷ் நடித்து வரும் கொடி படத்திலும அவர் நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் இப்போது, கொடி படத்தில் இருந்து ஷாமிலி விலகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காரணம், அந்த படத்தில் நாயகியாக நடிக்கும் திரிஷாவுக்குத்தான் கதையில் முக்கியத்துவம் உள்ளதாம். ஷாமிலிக்கு சில பாடல் களுக்கு மட்டும் வந்து செல்லும் சாதாரணமான வேடம்தானாம். அதனால் கதை பிடிக்கவில்லை என்று அவர் அப்படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. என்றாலும், இதுபற்றிய உறுதியான தகவல்கள் சம்பந்தப்பட்ட வர்களிடமிருந்து இன்னும் வெளியாகவில்லை.