டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் ரிஷிகேஷ். வேலையில்லா பட்டதாரியில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் தனுஷின் நெருங்கிய உறவினரும்கூட. தற்போது ரிஷிகேஷ், ரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். முதல் படத்திலேயே சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கிறார். அஞ்சாதே நரேன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார். சாய்பரத் என்ற புதுமுகம் இயக்குகிறார். லவ், த்ரில்லர் வகை கதை. ஹீரோவுக்கு நிகரான முக்கியத்தும் நரேனுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது.