தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவா இயக்கத்தில், அஜீத் நடித்த வேதாளம் படத்தில் முதலில் தங்கையாக நடிக்க சில முன்னணி நடிகைகளை அணுகியபோது, அஜீத்துடன் நடிக்க ரொம்ப ஆசைதான். ஆனால் தங்கையாக நடித்தால் அதன்பிறகு ஹீரோயின் வேடம் கிடைப்பது அரிதாக விடும் என்று விலகிக்கொண்டனர். அந்த சமயத்தில் லட்சுமிமேனன் மட்டும்தான் ஹீரோயின் இமேஜ் பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக அஜீத்தின் தங்கையாக நடித்தார்.
ஆனபோதும் அதையடுத்து ஜெயம்ரவியுடன் மிருதன் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்துள்ளார் லட்சுமிமேனன். அதேசமயம், வேதாளத்தில் அவர் நடித்து முடித்ததில் இருந்து தங்கை வேடங்களில் நடிக்க தொடர்ந்து சில டைரக்டர்கள் லட்சுமிமேனனுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். இந்த படமும் வேதாளம் மாதிரியே தங்கை வேடத்தை மையமாகக் கொண்ட கதைதான் என்று சொல்பவர்கள், அப்படி நடித்தால் கதாநாயகிக்குரிய சம்பளம் தருவதாகவும் அவரை துரத்துகிறார்களாம்.
இப்படி சில டைரக்டர்கள் தொடர்ந்து நச்சரிப்பதால், சின்ன வேடமோ, பெரிய வேடமோ தங்கை வேடத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று இப்போது திட்டவட்டமாக கூறி வருகிறார் லட்சுமிமேனன். அஜீத்துடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்ததால் மட்டுமே தங்கையாக நடிக்க சம்மதித்தேன். ஆனால் இனிமேல் எத்தனை பெரிய தங்கை வேடம் என்றாலும் நடிக்கிற ஐடியாவே இல்லை என்று ஆளை விடுங்கள் என்று கும்பிடு போடுகிறாராம் லட்சுமிமேனன்.