இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான மஜ்னு படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்து வருகின்றார். இயக்குனர் சண்டூ மொண்டெடி இயக்கத்தில் உருவாகும் பிரேமம் பட நாயகிகள் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபஸ்டியன் இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்கின்றனர். பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் எனும் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார். சித்தாரா எண்டர்டையின்மென்ட் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.
இப்படத்தில் நாக சைதன்யாவின் தந்தையாக டோலிவுட்டின் பிரபல நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐதராபாத்தில் நடைபெறும் மஜ்னு படத்தின் படப்பிடிப்பில் வெங்கடேஷ் கலந்து கொண்டுள்ளார். வெங்கடேஷ் நாக சைதன்யாவிற்கு தாய் மாமா என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கடேஷின் தங்கை லக்ஷ்மிக்கும் நடிகர் நாகார்ஜுனாவிற்கும் பிறந்தவர் தான் நாக சைதன்யா. நாகார்ஜுனாவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றாராம்.