ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மதராசபட்டினம் படத்தின் வாயிலாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் ஐ, தங்கமகன், கெத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது பிற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் எமி ஜாக்சனுக்கு அக்கட தேசத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடிக்கவிருக்கும் ராபின் ஹூட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க எமி ஜாக்சனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் எவடு ஒக்கடு படத்தில் நடிக்க இருந்த ரவி தேஜா அப்படத்தின் கதையில் திருப்தி ஏற்படாததால் அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். மேலும் இயக்குனர் சக்ரி இயக்கத்தில் ராபின் ஹூட் படத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இம்மாத இறுதியில் நிறைவு பெறும் என கூறப்படுகின்றது. படப்பிடிப்புகள் மார்ச் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.