தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெறி' படத்தின் டீசர் கடந்த வாரம் வெளிவந்து 4 நாட்களிலேயே 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது. அதோடு 2,20,000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் அள்ளி இந்தியத் திரையுலகில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. யு டியூபில் ஒரு படத்தின் டீசர், அதுவும் தமிழ்ப் படத்தின் டீசருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அஜித்தின் 'வேதாளம்' படம் புரிந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற வேகத்திலேயே விஜய் ரசிகர்கள் இதைச் செய்திருப்பதாகத் தெரிகிறது.
இதனிடையே, தெறி படத்தின் ஓபனிங் பாடல் பற்றிய விஷயம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். “ஜித்து ஜில்லாடி பாடல் இளைய தளபதியின் இதுவரை இல்லாத மிகச் சிறந்த ஓபனிங் பாடலாக இருக்கும். இந்திய காவல் துறையை பெருமைப்படுத்தும் ஒரு பாடலாக இருக்கும், என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாதக் கடைசியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தெறி படத்தின் பாடல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.