‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நான் படத்திற்குப் பிறகு இயக்குனர் ஜீவா சங்கர், விஜய் ஆண்டனி இணையும் படம் எமன். இப்படி ஒரு தலைப்பை ஒரு படத்திற்கு வைத்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். பொதுவாக திரைப்படங்களுக்கு தலைப்பு வைப்பதற்குக் கூட திரையுலகத்தில் சென்டிமென்ட் பார்ப்பார்கள். பல படங்கள் பெயர் வைக்காமலேயே ஆரம்பமாகி பட வெளியீட்டிற்கு முன்தான் பெயரையே வைக்கிறார்கள். போகிற போக்கில் பெயர் வைக்காத படம் என படங்கள் ரிலீஸ் ஆனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தப் படத்திற்கு 'எமன்' என ஏன் பெயர் வைத்தீர்கள் என படத்தின் நாயகனான விஜய் ஆண்டனியிடம் பலர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும் பதிலளித்துள்ளார். இந்துக்களின் ஆகம விதிப்படி சிவனின் அவதாரமே எமன். தர்மத்தைக் காக்கும், தன்னை படைத்த கடவுளுக்ககாகவும் தர்மம் தவறாத, கடவுள் எமன்" என படத்திற்குப் பெயர் வைத்ததற்கான காரணத்தைச் சுருக்கமாகத் தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.
இப்படத்தின் பூஜை இன்று எளிமையாக நடைபெற்றது. 2.0, கமல்ஹாசன் நடிக்கும் படம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களுடன் எமன் படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.